உள்நாடு

பாடசாலை கல்விச் சுற்றுலாவிற்கு புதிய சட்டங்கள் உள்ளடங்கிய சுற்றுநிரூபம்

(UTV|கொழும்பு) – பாடசாலை மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வது குறித்து புதிய சட்டங்கள் உள்ளடங்கிய சுற்றுநிரூபத்தை அதிகாரிகளுக்கு அனுப்புவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கோமரங்கடவல – மதவாச்சி குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் நால்வர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்விச் சுற்றுலாவை ஏற்பாடு செய்யும்போது, பயணத்தூரம் குறித்து கவனம் செலுத்தும் புதிய சட்டங்களை உள்ளடக்குவதற்கும் கல்வி அமைச்சு நடவடிக்கை தீர்மானித்துள்ளது.

திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்களடங்கிய சுற்றுநிரூபத்தை மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அதிபர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

Related posts

அஸ்வெசும நலன்புரி திட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலதிக கால அவகாசம் வழங்க தீர்மானம்

editor

கொரோனா வைரஸ் – 72 பேருக்கு உறுதியானது

மனித உரிமை தினத்தில் நீதி கோரும் தமிழ் மக்கள்