சூடான செய்திகள் 1

பாடசாலைப் புத்தகங்கள் இன்னமும் விநியோகிக்கப்படவில்லை

(UTV|COLOMBO) இலவசப் பாடசாலைப் புத்தகங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் இன்னமும் நிறைவுறவில்லை என, இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

பாடசாலைப் புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்படாமையால் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் இலவசப் பாடப்புத்தகங்கள் இன்னமும் பகிர்ந்தளகிக்கப்படவில்லை என தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதமளவில் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் இன்னமும் விநியோகிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்த வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related posts

பொதுஜன பெரமுன எம்பிகளுக்கு உயர் பதவிகளும், வாகனங்களும் வழங்க திட்டம்

கோட்டாபய முன்வைத்த மனுவை ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவு

களுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு 8 மணி வரை?