வகைப்படுத்தப்படாத

பாடசாலைக்குள் கத்தி குத்து தாக்குதல்

(UTV|GALLE)-கொஸ்கொட பிரதேசத்தில் பாடாசாலையொன்றில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்து பலபிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காயமடைந்துள்ளவர்கள் அந்த பாடசாலையில் தரம் பத்தில் கல்வி பயின்று வந்த மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இரண்டு மாணவர்களுக்கு இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு மாணவன் மற்றைய மாணவனின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார்.

இதன்போது மேலும் ஒரு மாணவன் மோதலை தடுக்க சென்ற வேளை, அவரின் கையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட மாணவனை கொஸ்கட காவல்துறை கைது செய்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

2018 சர்வதேச நுகர்வோர் உரிமை தினம் இன்று

இலங்கையின் மதிப்புமிக்க 10 இளம் நபர்களுள் ரஸ்னி ராசிக்

அல்பேனியா நாட்டில் தொடர் நிலநடுக்கங்கள் – 68 பேர் காயம்