உள்நாடு

பாடசாலைகளை நடத்துவது குறித்து விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – எரிபொருள் நெருக்கடி மற்றும் நாட்டில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக அடுத்த வாரம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் இந்த வாரத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

திடீரென தரையிறக்கபட்ட விமானம்

இதுவரை இராஜினாமா செய்யவில்லை : சுமேத பெரேரா

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் ஜனாதிபதி ரணில்

editor