உள்நாடு

பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின இவ்வாண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.

அதற்கமைய முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21ஆம் திகதி முதல் மே 9ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மே 10 முதல் 13 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இரண்டாம் தவணை மே 14ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஆகஸ்ட் 8 முதல் 17 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஆகஸ்ட் ஆகஸ்ட் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 16ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 17ஆம் திகதி முதல் டிசம்பர் 19ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 12 முதல் 20 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 முதல் மே 23 வரை இடம்பெறவுள்ளது. மே 24 முதல் 27 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. இரண்டாம் தவணை மே 28 முதல் ஆகஸ்ட் 19ஆம் திகதி வரை இடம்பெற்றது. ஆகஸ்ட் 20 முதல் 24 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஆகஸ்ட் 25 முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

நவம்பர் 1 முதல் 16 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 17 முதல் டிசம்பர் 19ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Related posts

எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்

புத்தாண்டின் சுப நேரங்கள்

இரசாயன தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க CID குழு