உள்நாடு

பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு

(UTV | கொழும்பு) –

பாடசாலை வளாகத்திற்குள் போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டாம் என தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. பாடசாலை வளாகப்பகுதிக்குள் முன்னெடுக்கப்படும் விசாரணைகளால் மாணவர்களிற்கு உடல் உளபாதிப்புகள் ஏற்படலாம் என கல்வித்துறை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

யுக்திய நடவடிக்கைக்கு சமாந்திரமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும் பொலிஸாரும் பாடசாலைபகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள -போதைப்பொருள் வர்த்தகத்தினை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள நிலையில் சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் பாடசாலைக்குள் எந்த விசாரணைகளையும் மேற்கொள்ளக்கூடாது என தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவ்வாறான விசாரணைகளால் மாணவர்கள் உடல்உளரீதியாக பாதிக்கப்படுவார்கள் அவர்களின் கற்றல் நடவடிக்கைககள் பாதிக்கப்படலாம் என இலங்கை ஆசியர்கள் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் இருந்து போதைப்பொருளை ஒழிக்கவேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம் ஆனால் முழுமையான திட்டமொன்றின்மூலமே போதைப்பொருளை ஒழிக்க முடியும் ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தினால் அகற்ற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் உள்ளவர்களின் தேவைக்காக அவர்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்காக இவ்வாறான திட்டங்கள் காலத்திற்கு காலம் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இதனால் ஆசியர்களிற்கும் மாணவர்களிற்கும் எந்த பலனுமில்லை எனவும் குறிப்பிட்டுள்ள மகிந்த ஜயசிங்க பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அவற்றை மிகவும் அவதானமாக முன்னெடுக்கவேண்டும் அதன் விளைவுகள் மாணவர்களுடன் நேரடியாக தொடர்புபட்டவை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாடசாலைகளில் போதைப்பொருள் விசாரணைகளை முன்னெடுக்கும் திட்டத்தை தங்கள் தொழிற்சங்கம் கடுமையாக எதிர்ப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுசெயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். யாரோ ஒருவரின் பிரச்சாரத்திற்காக சிறுவர்களை பலிகடாவாக்ககூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல மாதங்களிற்கு முன்னர் மாணவர்கள் ஐஸ் கொண்டுவந்தனர் என தெரிவித்து மாணவர்களின் புத்தகபைகளை சோதனையிட்டனர் ஆனால் எதனையும் கண்டுபிடிக்கவில்லை என தெரிவித்துள்ள ஜோசப்ஸ்டாலின் இதுவும் அதேமாதிரியான திட்டம் பாடசாலைகளிற்குள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்ய தீர்மானம்”

கொழும்பை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு

ரிப்கான் பதியுதீனுக்கு விளக்கமறியல் [VIDEO]