பாக்கிஸ்தான் நாட்டின் தேசிய தின வைபவத்தில் வரவேற்பு வைபவம் 25 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் புதிய உயர் ஸ்தானிகர் பாஹீம் உல் அசீஸ் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கலந்து கொண்டார்.
அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,சபாநாயகர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முப்படைகளின் தளபதிகள், இலங்கையில் உள்ள தூதுவர்களும் கலந்து சிறப்பித்தனர்
(அஷ்ரப் ஏ சமத்)











