உள்நாடு

பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்திம் ஆரம்பமானது!

(UTV | கொழும்பு) –

பாக்கிஸ்தான் அரசாங்கம் 5வது முறையாகவும் இலங்கை மாணவர்களுக்கு உயர்கல்வியை பாக்கிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் கற்பதற்காக 2023 ஆம் ஆண்டு 321 அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தினை ஆரம்பித்து வைத்து. தெரிபு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கடிதம் வழங்கி வைக்க்பபட்டது.

இவ் வைபவம் கொழும்பு ரமடா ஹோட்டலில் இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர் ஸ்தாணிகர் மேஜர் ஜெனரல் உமர் பாருக்கி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜய்ந்த , அமைச்சா்களான நிமல் சிறிபால டி சில்வா, விதுர விக்கிரமநாய்கக, மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் உயர்கல்வியமைச்சின் அதிகாரிகள் புலமைப்பரிசில் பெறும் மாணவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த உயர்ஸ்தாணிகர்
கடந்த 5 வருடங்களாக இலங்கை மாணவர்களுக்கு பைத்தியம் ,பொறியியல் துறைகளில் புலமைப்பரிசில் பயிற்சித் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை மாணவர்கள் 357 பேர் பாக்கிஸ்தானில்உள்ள கல்வி நிலையங்களில் கலாநிதி, மற்றும் பொறியில் ,கனனி, முகாமைத்துவம், வைத்தியத்துறை, பயின்று வருகின்றனர். இவ்ஆண்டு 321 மாணவர்கள் தெரிபு செய்யப்பட்னர். உயர்கலவியமைச்சு, மற்றும் பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவுடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு மாகாணத்திற்கும் எமது நாட்டு பல்கலைககழக அதிகாரிகள் தேர்வுப் பரீட்சை மூலமே இம் மாணவர்கள் தெரிபு செய்ய்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாக்கிஸ்தான் அரசாங்கம் இலங்கையில் கடந்த 7 தசாப்தங்களாக உறவைக் கொண்டுள்ளது. கடந்த காலங்களில் பாதுகாப்புத்துறையில் பல்வேறு பயிற்சிகள் இலங்கை பாதுகாப்புபடையினர் பாக்கிஸ்தானில் பயிற்சிகளைப் பெற்றனர்..

         

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எரிவாயு கப்பலின் வருகை மேலும் 3 நாட்கள் தாமதம்

பாராளுமன்றில் பாலியல் வன்கொடுமை: குற்றப்பத்திரிகை தயார்

பாடசாலை விடுமுறை தொடர்பான தீர்மானம்!