வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் vs பங்களாதேஷ்; பங்களாதேஷ் அணி அறிவிப்பு

(UTVNEWS | BANGALADESH) – பாகிஸ்தான் அணிக்கெதிரான இருபதுக்கு 20 தொடரில் விளையாடும், மாற்றம் கலந்த பங்களாதேஷ் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொஹமதுல்லா தலைமையிலான 15பேர் கொண்ட அணியில், முன்னணி துடுப்பாட்ட வீரரான டமீம் இக்பால் அணியில் இணைந்துள்ளார்.

இலங்கை மண்ணில் நடைபெற்ற இருபதுக்கு20 தொடரில் டமீம் இக்பால் தலைமையிலான பங்களாதேஷ் அணி, முழுமையாக தொடரை இழந்தது. இதனால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இதன்பிறகு எந்தவித தொடரிலும் பங்கேற்காத தமீம் இக்பால், நீண்டதொரு இடைவெளிக்கு பிறகு அணியில் இணைந்துள்ளார்.

மேலும், 20 வயதான வலக்கை மித வேகப்பந்துவீச்சாளர் ஹசன் மொஹமட், இப்போட்டியின் ஊடாக சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை பெறுகிறார்.

இதுதவிர, வலக்கை வேகப்பந்து வீச்சாளரான ருபெல் ஹொசைனும், அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.

அணியின் முழுமையான விபரம்,

மொஹமதுல்லா தலைமையிலான அணியில், தமீம் இக்பால், சௌமியா சர்கார், மொஹமட் நய்ம், நஜ்முல் ஹொசைன், லிடொன் தாஸ், மொஹமட் மிதுன், அபீப் ஹொசைன், மெயிடி ஹசன், அமினுல் இஸ்லாம், முஷ்டபிசுர் ரஹ்மான், சயீப்புல் இஸ்லாம், அல் அமீன் ஹொசைன், ருபெல் ஹொசைன், ஹசன் மொஹமத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related posts

பெற்ற மகளுக்கு தந்தை செய்யும் காரியமா இது?

ஆசிரிய நியமனம் , இடமாற்றம் தொடர்பில் புதிய கொள்கை – ஜனாதிபதி

NICs to be issued through Nuwara Eliya office from today