உலகம்

பாகிஸ்தான் விமான விபத்தில் 97 பேர் பலி

(UTV|பாகிஸ்தான் )- பாகிஸ்தான் கராச்சியில் இடம்பெற்ற பயணிகள் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் சுமார் 99 பேருடன் பயணித்த பயணிகள் விமானம், கராச்சி நகரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 91 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர். இந்தத் 99 பேரில் இருவர் உயிர் பிழைத்துள்ளனர்.

இறந்தவர்களில் 60 பேரின் உடல்கள் ஜே.பி.எம்.சி மருத்துவமனையிலும், 32 பேரின் உடல்கள் சி.எச்.கே மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க சிறிது நேரத்திற்குள்ளாக விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துள்ளது.

Related posts

முன்னாள் ‘TATA’ தலைவர் மரணம்

கொரோனா காரணமாக 15 நாடுகளுக்கு கட்டார் தடை விதிப்பு

ஜப்பான் நாட்டில் அவசரகால நிலை பிரகடனம்