வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷரப் வைத்தியசாலையில் அனுமதி

(UTV|PAKISTAN) பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷரப் துபாயில் வசித்துவருகிறார். இவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக 2016-ம் ஆண்டு துபாய்க்கு சென்றார். ஆனாலும் அவர் யாருடனும் பேசவோ, சந்திக்கவோ கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அவரது நரம்புகள் வலுவிழந்து நிற்பதற்கும், நடப்பதற்கும் சிரமப்பட்டு வந்தார்.

அவர் உடல்நிலை காரணமாக பாகிஸ்தானுக்கு செல்லமுடியாத நிலையில் இருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம்  ஏற்றுக்கொண்டு, ஜூன் 12-ம் திகதிக்கு ஒத்திவைத்தது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவர் துபாயில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

 

 

 

Related posts

Ireland bowled out for 38 as England surge to victory

மின் கட்டணம் தொடர்பில் விசேட திருத்தம்!

கோடபாய ராஜபக்ஷ கோரிய மனு ரத்து