உலகம்

பாகிஸ்தான் பாடசாலையில் குண்டு வெடிப்பு – சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி

(UTV | பாகிஸ்தான் ) –  பாகிஸ்தானில் பாடசாலையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 8.30 மணியளவில் மதகல்வி கற்றுக்கொடுத்துவந்த மசூதியின் மையப்பகுதியில் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 70-க்கும் அதிகமான சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆங் சான் சூகி மீதான வழக்கு விசாரணை அடுத்த வாரம்

சர்வதேச கோரிக்கையை நிராகரிக்கும் இஸ்ரேல் எதிர்க்கும் மேக்ரான்.

காபூல் விமான நிலைய குழப்பத்திற்கு அமெரிக்காவே காரணம்