உள்நாடு

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மிலாத்-உன்-நபி கொண்டாட்டம்

(UTV | கொழும்பு) – கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை பாகிஸ்தான் நட்புறவு சங்கம் இணைந்து ஒக்டோபர் 22, 2021 அன்று (வெள்ளிக்கிழமை) ஈத் மிலாத்-உன்-நபி விழாவை உயர் ஸ்தானிகராலயத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

பாகிஸ்தான் புலம்பெயர் நாடுகளின் உறுப்பினர்கள் மற்றும் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புனித குர்ஆன் ஓதுதலுடன் இந்நிகழ்வு ஆரம்பமானது. பதில் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமட் அவர்கள் இந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில்,
நபிகளாரின் பிறந்த தினத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி குறிப்பிட்டதோடு முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்புமிக்க ஆளுமையை பற்றியும் விளக்க படுத்தினார். இதைத் தொடர்ந்து, கசீதாக்கள் பாடப்பட்ட தோடு, பங்கேற்பாளர்களால் இலங்கை பாரம்பரிய முறையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும் சொல்லப்பட்டது.

வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் உலகின் அமைதி மற்றும் செழிப்புக்காக சிறப்பு பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. இறுதியாக, பங்கேற்பாளர்களுக்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் பாரம்பரிய முறையில் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மிகச் சிறப்பான நிகழ்வை முன்னிட்டு, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு ஈத் மிலாத் உன் நபி வாழ்த்துக்களைத்தெரிவித்துக் கொள்கிறது.

Related posts

பெங்கால் சூறாவளியின் தற்போதைய நிலை ?

editor

இன்று முதல் 10 நாட்களுக்கு மின்துண்டிப்பு

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக பிரபாசங்கர் நியமனம்!