உள்நாடுவணிகம்

பாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இருதரப்பு பேச்சுவார்த்தை

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற ) முஹம்மது சாத் கட்டக், வர்த்தக மற்றும் முதலீட்டு இணைப்பாளர் திருமதி அஸ்மா கமால் ஆகியோர் இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வை சந்தித்து கலந்துரையாடினர்.

பாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக கலந்துரையாடல் இதன்போது இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் மீதுள்ள தடைகளைத் நீக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் கலந்துரையாடபட்டது.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், பாகிஸ்தானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு உயர் ஸ்தானிகர் வர்த்தக அமைச்சருக்கு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வடக்கு – கிழக்கு பாடசாலைகளில் அதிகரிக்கும் அரசியல் ஆதிக்கங்கள்: இலங்கை ஆசிரியர் சங்கம்

மேலும் 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

மைத்திரியை விசாரிக்குமாறு உத்தரவு