விளையாட்டு

பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றியை ருசித்த அவுஸ்திரேலிய

(UTV|COLOMBO) அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி, 41 ரன்கள் வித்தியாசத்தில்  தோல்வியை தழுவியது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 17 ஆவது போட்டி ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணியளவில் டவுன்டானில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 307 ஓட்டங்களை குவித்தது.

308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, ஆஸ்திரேலியா 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி போட்டியில் வெற்றி பெற்றது.

 

Related posts

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி

ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிக்கு இலங்கை வீரர்கள்

இங்கிலாந்திடம் இந்தியா வீழ்ந்தது