விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் செம்பியன்ஸ் போட்டியில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 124 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டது.

பெர்மிங்ஹாமில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை இந்திய அணிக்கு வழங்கியது.

இதன்படி, இந்திய அணி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த நிலையில், இடைக்கிடையில் மழை குறுக்கிட்டதால் போட்டி 48 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதன்படி, இந்திய அணி 48 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 319 ஓட்டங்களை பெற்றது.

இந்தநிலையில் மழை மீண்டும் குறுக்கிட, பாகிஸ்தான் அணிக்கு 41 ஓவர்களில் 289 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் 33.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே அந்த அணி பெற்றது.

உபாதை காரணமாக வஹாப் ரியாஸ் துடுப்பெடுத்தாட களமிறங்கவில்லை.

இதன்படி, இந்திய அணி இந்த போட்டியில் 124 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.

இதனிடையே இந்த தொடரின் பிரிதொரு போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

ஓவலில் இடம்பெறும் அந்த போட்டியில் அவுஸ்ரேலிய மற்றும் பங்களாதேஸ் அணிகள் பங்குகொள்கின்றன.

India vs Pakistan ICC Champions Trophy 2017 HIghlights

[ot-video][/ot-video]

Related posts

நாணயற் சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி

ஐரோப்பிய லீக் தொடர் கேள்விக்குறி?

IPL : தூக்கியெறியப்பட்ட குசல்