விளையாட்டு

பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் இரத்து

(UTV | கொழும்பு) – பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளன.

ஐசிசி ஆடவர் இருபது 20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இங்கிலாந்தின் ஆடவர் அணி பாகிஸ்தானில் 2021 அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் இரண்டு இருபது 20 போட்டிகளில் விளையாட இருந்தது.

அதேநேரத்தில் மகளிர் அணி இரண்டு இருபது 20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட வரையறுக்கப்பட்ட ஓவர் தொடருக்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்தது.

இதேவேளை, அண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூஸிலாந்து அணி, இறுதி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியை கைவிட்டு மீண்டும் நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தசுன் ஷானக்க நீக்கம் – புதிய தலைவர் இன்று நியமிப்பு!

“ஷேன் வார்னேயின் மரணத்தில் சந்தேகமில்லை”

தகாத வார்த்தை பிரயோகம் : பங்களாதேஷ் இளம்படைக்கு தடை விதித்தது சர்வதேச கிரிக்கட் பேரவை