வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தானில் மருத்துவமனையில் துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழப்பு

(UTV|PAKISTAN) இருதரப்பினருக்கு இடையில் பாகிஸ்தானில் மருத்துவமனையில் ஏற்பட்ட மோதலில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நங்கானா சாஹிப் மாவட்டத்தில் உள்ள பாகா ஷக் என்ற கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதில் இருதரப்பையும் சேர்ந்த பலர் காயம் அடைந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். மருத்துவமனையிலும் இருதரப்பினருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் உருவானதில் இருதரப்பையும் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டனர்.

மேற்படி இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். உடனடியாக நங்கானா சாஹிப் மாவட்டத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

சிறியானிக்கு அரசாங்கம் கொடுத்த பரிசு

முடிவிற்கு வந்தது கிளிநொச்சி வீதிமறிப்புப் போராட்டம்

நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி