உலகம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு- 4 பேர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) –

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சிலர் நேற்று  நடத்திய பேரணியில் எதிர்பாராத வகையில், திடீரென குண்டுவெடிப்பு சம்பவம் இடமபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில், அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.மேலும் படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இதனை அக்கட்சிக்கான மாகாண பொது செயலாளர் சலார் கான் காக்கர் உறுதிப்படுத்தியுள்ளார். இச்சம்பவத்துக்கு நாங்கள் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறோம். கட்சி தொண்டர்களுக்கு பதிலாக பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என அவர் கூறியுள்ளார். எனினும், காயமடைந்த நபர்களில் சிலரின் நிலை கவலைக்குரிய வகையில் உள்ளது.
அதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சில மணிநேரங்களில் இந்த பேரணி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நேபாளத்தில் தொடர் நிலநடுக்கம்

இலங்கை நோக்கி வந்த விமானம் கடத்தப்பட்டுள்ளது!!!

பெப். 6 வரை இரவு நேர ஊரடங்கு அமுலுக்கு