உள்நாடுபிராந்தியம்

பஸ் – வேன் மோதி கோர விபத்து – பலர் காயம்

கந்தகெட்டிய – போபிட்டிய வீதியில் வெவேதென்ன பிரதேசத்தில் தனியார் பஸ்ஸொன்று ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற வேனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (17) காலை 06.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வேனில் பயணித்த 8 பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்து கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஏழு பேர் மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கடற்படைத் தளபதி சபாநாயகரைச் சந்தித்தார்

editor

தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு

editor

அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க மத்திய வங்கியிடம் இருந்து நிதி