உலகம்

பஸ் – லொறி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பேர் பலி

(UTV|இந்தியா ) – இந்தியா – திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்ற கனரக லொறி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் பலர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மியன்மார் மண்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

ஜப்பான் தேர்தலில் ஆளும் கூட்டணி பெரும் வெற்றி

ஜப்பானின் பிரபல நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா கொரோனாவால் பலியானார்