உள்நாடு

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக நேற்றிரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அனைத்து பொது பஸ் மற்றும் ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சரக்கு மற்றும் எரிபொருள் கொண்டு செல்லும் 08 ரயில்கள் மாத்திரமே இன்று (21) சேவையில் ஈடுபடும்.

வழமையான பயணிகள் போக்குவரத்துக்காக ரயில்கள் சேவையில் ஈடுபடாதென ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையினருக்காக விசேட பஸ் போக்குவரத்து முன்னெடுக்கப்படும். துறைமுகங்கள் மற்றும் சுங்கம் உள்ளிட்டவற்றில் தொழில் புரியும் ஊழியர்களுக்காகவும் சில பஸ் போக்குவரத்துகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச். பண்டுக்க ஸ்வர்ண ஹங்ஸ தெரிவித்துள்ளார்.

 

Related posts

கொழும்பு குப்பை புதிய இடத்திற்கு

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

7 நாடுகளுக்கு இலவச விசா: அமைச்சரவை அனுமதி