சூடான செய்திகள் 1

பஸ் சாரதிகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) -பஸ் டிப்போக்களில் சாரதிகள் பற்றக்குறை இருப்பதால் அதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் 35 அதி சொகுசு பஸ்கள் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளன. இதற்கிணங்க அரைச் சொகுசு பஸ்வண்டிகளும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

56 ரயில்பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. பாதுக்க -அவிசாவளை, ராகமை- வெயாங்கொடை, கொழும்பு- பாணந்துறை, களுத்துறை ஆகிய வீதிகளும் இதில் உள்ளடங்குகின்றன.

இதேவேளை, 2000 பஸ் வண்டிகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகப் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஞானசார தேரருக்கு சுதந்திர தினமன்று பொது மனிப்பு வழங்குமாறு கோரிக்கை

பொதுமக்கள் அனைவரும் தெளிவுடனும் புத்திசாதுர்யத்துடனும் செயற்பட வேண்டும்

இன்று(21) முதல் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சீருடை