வகைப்படுத்தப்படாத

பஸ் கவிழ்ந்து விபத்து – 18 பேர் பலி

(UTV|ETHIOPIA)-ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொல்லேகா பகுதியில் ஏராளமான பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், 33 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

எத்தியோப்பியா நாட்டில் சாலைகளை முறையாக பராமரிக்கப்படாததாலும், வாகனங்களை முறையான பராமரிப்பின்றி இயக்கப்பட்டு வருவதாலும் விபத்துக்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் பலி

உலகின் அதிகூடிய வயதைக்கொண்ட நபி தஜுமா காலமானார்

Army Commander before PSC