சூடான செய்திகள் 1

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை-போக்குவரத்து அமைச்சு

(UTV|COLOMBO)-பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரித்தமைக்கு இணையாக, எந்த வீதத்தில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இன்றைய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்படும் என பிரதியமைச்சர் அஷோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த பட்ச பஸ் கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் யோசனை முன்வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, இன்று இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக பிரதியமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்தார்.

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில், நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் பரிந்துரைக்கப்படும் யோசனை திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி பெற வேண்டும் என பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தமது யோசனைக்கு இணங்காவிட்டால் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

ஸ்ரீதேவி கடுகதி ரயில் சேவை ஆரம்பம்

ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பம்

முத்திரை கண்காட்சி எதிர்வரும் 25 ஆம் திகதி முதல்