வணிகம்

பழவகைகளில் விஷ இரசாயன பொருட்கள் அடங்கியுள்ளதா? – சுகாதார அமைச்சு நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் விற்பனை செய்யப்படும் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பழவகைகளில் கிருமிநாசினி மற்றும் விஷ இரசாயன பொருட்கள் அடங்கியுள்ளதா என்பதை கண்டறிய சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைவாக சந்தையிலுள்ள குறிப்பிடப்பட்ட நான்கு வகை பழங்களின் மாதிரிகளை மாவட்ட உணவு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் அரச இரசாயன பரிசோதனை பிரிவிடம் சமர்ப்பிக்குமாறு மாவட்ட பிரதேச சுகாதார சேவைப்பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் விற்பனையிலுள்ள பப்பாசி, அன்னாசி, வாழைப்பழம் மற்றும் வெளிநாட்டு திராட்சை உள்ளிட்டவற்றின் மாதிரிகள் பெறப்படவுள்ளன.

சந்தையில் விற்பனைக்குள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பழவகைகளில் இருக்கும் கிருமிநாசினிகள் உரியமுறையில் பரிசோதிக்கப்படுவதில்லை என்று பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொடர்ந்தும் வாகன இறக்குமதிக்கு தடை

ஹுவாவி ஸ்மார்ட்போன்களுக்கு கவர்ச்சிகரமான கழிவுகளை வழங்கும் Ikman Deals

இலங்கை – பங்களாதேஷிற்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை