உள்நாடு

பல வருடங்களுக்குப் பிறகு கொழும்பில் தலைதூக்கும் சிக்கன்குன்யா

பல வருடங்களுக்குப் பிறகு கொழும்பு மற்றும் கோட்டே பகுதிகளில் சிக்கன்குன்யா நோய்ப் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நுளம்பு பெருக்கம் காணப்படும் இடங்களை அகற்றுவதன் மூலம் மட்டுமே சிக்குன்குன்யா பரவலைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நோய் தற்போது ஆபிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்கள் முழுவதும் பரவும் ஒரு நோயாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்தோடு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் உள்ள தீவுகளிலும் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சிக்கன்குன்யா வைரஸ் பாதிக்கப்பட்ட நுளம்பு கடிப்பதன் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது, மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட பயணிகளிடமிருந்து பாதிக்கப்படாத பகுதிகளுக்கு பரவக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.

நாட்டில் சிக்கன்குன்யா நோய் மீண்டும் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நாட்கள் பாடசாலை விடுமுறை நாட்கள் என்பதால், குழந்தைகள் அடிக்கடி சுற்றுச்சூழலுக்கு சென்று வருவார்கள், மேலும் சில பகுதிகளில் மழைக்காலம் அதிகரிக்கும் போது, ​​நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

எனவே, மக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் அழிக்கப்பட்டு, சுற்றுப்புற சூழல் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

சவால்களுக்கு மத்தியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணமிது

பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் களமிறங்குகிறார் காசிலிங்கம்

editor

சுதந்திர தினத்தன்று போராட்டத்திற்கு அழைப்பு!