உள்நாடு

பல மாவட்டங்களில் வெப்பமான காலநிலை

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் இன்று(04) சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாண பிரதேசங்களில் காலையில் பனிமூட்டம் நிலவக்கூடும் என குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பல மாவட்டங்களில் வெப்பமான காலநிலை காணப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை போன்ற பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

தபால் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் பணிப்புறக்கணிப்பில்

 இளநீர் விலை அதிகரிப்பு – மக்கள் விசனம்

கிழக்கு ஆளுநரின் இப்தார் காத்தான்குடியில்!