சூடான செய்திகள் 1

பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை-வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு சமிஞ்ஞை

(UTV|COLOMBO) இன்றும்(18) நாளையும்(19) நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை குறிப்பாக மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக குறித்த திணைக்களம் இன்று(18) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

Related posts

இன்று(02) முதல் முதல் புதிய வீதி

ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான நோக்கம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

ஜனாதிபதி தலைமையில் மீண்டும் அமைச்சரவை கூட்டம்