சூடான செய்திகள் 1

பல பெண்களை ஏமாற்றிய ஒருவர் கைது

(UTV|COLOMBO)-ஃபேஸ்புக் ஊடாக இளம் பெண்களை தொடர்பு கொண்டு நிதி மோசடியில் ஈடுபட்டுவந்த பாலஸ்தீன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 21ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு ஏமாற்றப்பட்ட பெண் ஒருவரிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அவரால் அனுப்பி வைக்கப்பட்ட நபர் ஒருவர் கொஹுவலை – ரத்நாவலி வீதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த பாலஸ்தீன நாட்டவர் நீர்கொழும்பு – கொச்சிக்கடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோட்டல் உரிமையாளர் என்று தம்மை அடையாளப்படுத்தி, ஃபேஸ்புக் மூலம் இளம் பெண்களை தொடர்பு கொண்டு அவர்களை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி அவர்களது இரகசிய படங்கள் மற்றும் காணொளிகளைக் பெற்று அவற்றை ஃபேஸ்புக்கில் பதிவேற்றுவதாக அச்சுறுத்தி கப்பம் பெற்று வந்துள்ளார்.

அவ்வாறு அவர் கிருலப்பனை பகுதியில வசிக்கும் பெண் ஒருவரிடம் இருந்து 28 லட்சம் ரூபாவை கப்பமாக கோரி இருந்த நிலையில், குறித்தப் பெண் வெளிநாட்டில் இருந்தபடி, தமது உறவினர் ஒருவர் ஊடாக காவற்துறையில் முறைப்பாடு செய்வித்துள்ளார்.

இதன் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

நற்பிட்டிமுனை முக்கியஸ்தர்கள் கிராம அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் ரிஷாத்துடன் பேச்சு

வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் உதவ முன்வந்துள்ளது

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்