சூடான செய்திகள் 1

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

(UTV|COLOMBO)-நிலவும் மழையுடனான காலநிலையுடன் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, கலவானை மற்றும் அயகம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் கடந்த 24 மணித்தியாலங்களாக பெய்த பலத்த மழையுடன் இவ்வாறு மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனுடன் களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட, புளத்சிங்கள, அகலவத்தை, மத்துகம, பதுரெலிய மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் அந்த பிரதேசங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இந்திய பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி

கொழும்பில் பலத்த காற்று: சாரிதிகள் மற்றும் பயணிகளுக்கு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு