உள்நாடு

பல பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் தடை

(UTV|NEGOMBO) – நீர்கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 24 மணி நேரம் நீர் விநியோகம் தடைசெய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி 06 ஆம் திகதி காலை 09 மணி முதல் அடுத்த நாள் காலை 09 மணி வரை நீர் வெட்டு விநியோகம் அமுலில் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, கொச்சிக்கடை, தூவ, பிட்டிப்பன, துங்கல்பிட்டிய, பஷியாவத்த, பமுனுகம, கட்டான, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையம், கட்டுநாயக்க விமானப் படைத்தளம், பண்டாரநாயக்க விமான நிலையப் பகுதி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

பேருந்து – ரயில் சேவைகள் நாளை மறுதினத்திலிருந்து வழமைக்கு

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த ஜனாதிபதிக்கும் இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor

மாணவன், மாணவியை கொடூரமாக தாக்கிய தேரரால் சர்ச்சை!