உள்நாடு

பல பகுதிகளில் நாளை 16 மணி நேரம் நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – நாளை (21) பல பிரதேசங்களுக்கு காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கஹஹேன, ஹங்வெல்ல, ஜல்தர-ரணால, கடுவெல, மாப்பிட்டிகம மற்றும் தொம்பே ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிலத்தடி நீர்த் தாங்கி சுத்தப்படுத்தப்படுவதால் நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்!

கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில் பயணிப்போருக்கு மறு அறிவித்தல் வரையிலான அறிவிப்பு

பதில் பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்க பரிந்துரை