உள்நாடு

பல சோதனைகளுடன் சாதித்த Sensei மர்ஜான் ஹரீர்.

 

தனது சிறு வயதினிலேயே 6 மாணவர்களின் Karate Black Belt கனவு நனவாகியது. பல சோதனைகளுடன் சாதித்தார் Sensei மர்ஜான் ஹரீர்.

தர்கா நகரில் இடம்பெற்ற Karate Black Belt

பட்டமளிப்பு விழா

தர்கா நகர் பிரதான வீதியில் அமைந்துள்ள “Orchid Arena”
புட்ஸால் மைதானத்தில் 06 மாணவர்கள் Karate Black Belt பட்டம் பெற்று கௌரவிக்கப்பட்டனர். SKS A International Sri Lanka Chief Instructor and Representative Sensei ஹரீர் அவர்களினால் மிகச் சிறப்பாக நடாத்தப்படுகின்ற கராதே வகுப்பினால் தர்கா நகர் மற்றும் பிரதேச மக்கள் பெரிதும் பயன்பெறுகின்றனர்.

விழாவில் பிரதம அதிதியாக ”ரூமி ஹாஷிம் பவுண்டேசன் தலைவர்” கலாநிதி ரூமி ஹாஷிம், ஜெஸுக் அஹமத், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்

.எஸ்.எம். அஸ்லம். பேருவளை பிரதேச சபை முன்னால் உறுப்பினர்களான ஹஸீப் மரிக்கார், சிறப்புப் பேச்சாளராக கலந்து சிறப்பித்த மௌலவி ஷப்ராஸ் நௌபர் (அல் பயானி), மரண விசாரணை அதிகாரி Beruwala Division Nasrin Naseer, செயலாளர் S KSA ஸென்ஸி எம். பாஹிக் மற்றும் கல்வி

அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் உற்பட பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

தொற்று நோய்தடுப்பு பிரிவுக்கு GMOA அழைப்பு

சீமெந்தின் விலை ரூ.1,200 ஐ கடந்தது

விமான நிலையங்கள் 22ம் திகதி முதல் திறப்பு