உள்நாடு

பல கட்ட விசாரணைகளின் பின்னர் மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் பணிநீக்கம்

பெண் பாராளுமன்ற ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பல கட்ட விசாரணைகளின் பின்னர் இந்த மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் என நிரூபணமாகியுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் பரிந்துரைகளின் அடிப்படையில், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன மூன்று ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய கடந்த தினம் ஒப்புதல் அளித்திருந்தார்.

Related posts

இ.தொ.காவினால் பின்வாங்கிய பதிவாளர் நாயகம்!

முட்டை விலை ஏன் அதிகரித்தது?

ரணில் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் விசேட சம்மேளனம்

editor