உள்நாடு

பல அரச நிறுவனங்கள் பணம் இல்லாமல் ஸ்தம்பிதம்?

(UTV | கொழும்பு) – பணப்பற்றாக்குறை காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன சபைகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமை காரணமாக அந்நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதும் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக பல முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில நிறுவனங்களில் அன்றாட நடவடிக்கைகளுக்குத் தேவையான எழுதுபொருள்களைக் கண்டறிவது, அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்குவது போன்றவை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளமை தெரிந்ததே.

அமைச்சுக்களில் புதிய திட்டங்களை ஆரம்பிப்பது மாத்திரமன்றி ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை பராமரிப்பதிலும் கூட கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சுகாதாரம், கல்வி, நெடுஞ்சாலைகள், வீடமைப்பு போன்ற அமைச்சுக்களில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை இருபதாயிரம் கோடிக்கு மேல் உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல அரசு நிறுவனங்களில் ஊழியர்களின் சம்பளம் வழங்குவதும் கடுமையான நெருக்கடியில் உள்ளது

இதேவேளை, இரண்டு அரச வங்கிகளில் இருந்தும் நிதி விடுவிக்கப்படாததால், நெல் சந்தைப்படுத்தல் சபையும் நெல் கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளது.

Related posts

சமய வழிபாடுகளில் ஈடுபட்டார் ஜனாதிபதி அநுர

editor

இன்று மற்றும் நாளை ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் சாந்த பண்டார நீக்கம்