உள்நாடு

பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் புதிய பணிப்பாளர் நியமனம்

(UTV|கொழும்பு) – ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் நந்த மல்லவராய்ச்சி பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ´சுபீட்சத்தின் நோக்கு´ கொள்கை பிரகடனத்திற்கு அமைய வறுமையற்ற இலங்கையை ஏற்படுத்தும் நோக்கில் பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

குறைந்த வருமானத்தை ஈட்டும் குடும்பங்களின் குறைந்த கல்வித் தகுதியை கொண்டுள்ள நபர்களுக்கு உரிய தொழிற்பயிற்சியினை வழங்கி அரசின் நிலையான தொழிலை பெற்றுக் கொடுப்பது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 17 பேர் குணமடைந்தனர்

அவர் தமது சொந்த வேலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்

பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!