உள்நாடு

பல்கலைக்கழக மாணவர்கள் பேருந்து விபத்து – இருவர் பலி – 35 பேர் காயம்

பதுளை, துன்ஹிந்த வீதியில் 04 ஆவது கிலோ மீற்றர் தூண் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் உயிரிழந்தனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தின் போது பேருந்தில் சுற்றுலா சென்ற மாணவர்கள் உட்பட 41 பேர் பயணித்துள்ளனர்.

விபத்தில் 35 பேர் காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related posts

தடுப்பூசி இறக்குமதிக்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்கவும்

அரச ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்!

வீட்டை சேதப்படுத்திய யானை – புத்தளத்தில் சம்பவம்.