உள்நாடு

பல்கலைக்கழ பரீட்சைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கொரொனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்ற நிலையில் பல்கலைக்கழகங்களின் இறுதி ஆண்டு பரீட்சை அட்டவணைகளில் எந்தவித மாற்றங்களும் ஏற்படுத்தப்போவதில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளுக்கமைய மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு பரீட்சை நடைபெறவதற்கான ஏற்பாடுகள் முன்கெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய பல்கலைக்கழகங்களில் இரண்டு குழுக்களாக மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு கடந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் கல்வி நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts

திவுலப்பிட்டியவில் 1,500 மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு

எகிறும் பெட்ரோல், டீசல் விலைகள்

விளையாட்டு செயலிகள் ஊடாக பணமோசடிகள்!