வகைப்படுத்தப்படாத

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO)-கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் இருந்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றால் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு பேரணி தற்போதைய நிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை சென்றடைந்துள்ளது.

இவ்வாறு பேரணியாக வந்த மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக வோட் பிரதேசத்தின் நுழைவு வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர்கள் சிலரால் இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

தமக்கு கண்டி மற்றும் பேராதனை மருத்துவமனைகளில் மருத்துவ பயிற்சியினை பெற்றுத்தருமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

திருச்சியில் இலங்கை தமிழர்கள் 10 பேர் உண்ணாவிரதம்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் சபாநாயகராக தெரிவு

Sri Lanka to honour retired quick Kulasekara tomorrow