சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு

(UTV|COLOMBO) யாழ். பல்கலைக்கழக மாணவனும், ஊடகவியலாளருமான ப.சுஜீவன் பல்கலைக்கழக 4 ஆம் வருட மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் இன்று(08) வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மாணவனின் தலைப் பகுதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரியும் யாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் இன்று(08) வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Related posts

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

CID இலிருந்து வெளியேறிய ராஜித [VIDEO]

27 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட்டுக்களை கடத்தியவர்கள் கைது