உள்நாடு

பல்கலைக்கழக மாணவர்கள் கைது!

(UTV | கொழும்பு) –

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழகத்தின் 4 ஆம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனடிப்படையில் கடந்த 14 ஆம் திகதி 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சமனலவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

சந்தேகத்திற்குரிய மாணவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிக் கல்வி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் 23, 24 மற்றும் 25 வயதுடைய மொரவக, ருக்கஹவில, அலுஹ்தாராம, இமதுவ மற்றும் கிடலாவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என சமனலவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பட்ஜட்டுக்கு முன் அமைச்சரவையில் மாற்றம்: களமிறங்கும் பசில்

இலங்கையை அச்சுறுத்தும் ‘டெல்டா’

 மீண்டும் இலங்கையர்களுக்கு e-visa அனுமதி