வகைப்படுத்தப்படாத

பல்கலைக்கழக அனுமதிக்குரிய Z வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளியீடு

(UDHAYAM, COLOMBO) – 2016-2017 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்குத் தேவையான Z வெட்டுப்புள்ளி விபரங்கள் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த வெட்டுப்புள்ளி விபரங்களை www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தில் அல்லது 1919 என்ற அரச தகவல் கேந்திர மத்திய நிலையத்திற்கு குறுந்தகவலை அனுப்புவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் குறித்த தொலைபேசி அழைப்பின் ஊடாகவும் இதுதொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளலாம். தொலைபேசி இலக்கங்கள் 0112-69-53-01, 0112-69-53-02, அல்லது 0112-69-23-57 ஆகும்.

ஆணைக்குழுவின் கீழ் உள்ள 14 பல்கலைக்கழகங்களுக்கும் 3 வளாகங்களுக்கும் 5 உயர் கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 109 பாடநெறிகளுக்காக இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக அனுமதிக்குத் தேவையாhன அடிப்படைத் தகைமைகளை பூர்த்தி செய்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 60 ஆயிரத்து 517 ஆகும். இவர்களில் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 106 ஆகும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கல்வி ஆண்டுக்காக சாதாரண அனுமதியின் கீழ்தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 696 ஆகும். இம்முறை சில பல்கலைக்கழகங்கள் ஊடாக புதிய பாடநெறிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழகம் மற்றும் சம்பந்தப்பட்ட பாடநெறிக்கான பதிவுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

Related posts

தமிழக மீனவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் – தமிழக முதல்வர்

US government death penalty move draws sharp criticism

ராஜஸ்தானில் கூடாரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு