உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்

(UTV | கொழும்பு) -பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்ற மாணவர்களின் விண்ணப்பத்தினை அத்தாட்சிப்படுத்திக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த கால அவகாசம் கடந்த வாரத்தில் நிறைவடையவிருந்த நிலையில் அதற்காக மீண்டும் எதிர்வரும் மே 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று தினங்களில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து பாடசாலைகளின் பிரதானிகளுக்கு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த கால அவகாசம் கடந்த வாரத்துடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு, சுகாதார பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றி ஒவ்வொரு பாடசாலைகளிலும் அதிபர் அல்லது பிரதி அதிபரினால், பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களின் விண்ணப்பத்தை அத்தாட்சிப்படுத்த வேண்டும் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணி நீக்கம்

நாளை முதல் 16 -19 வயதானோருக்கு தடுப்பூசி

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை