(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக, வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வௌியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக இந்த வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
![](https://www.utvnews.lk/wp-content/uploads/2021/04/UTV-NEWS-ALERT-new-6.jpg)