உள்நாடு

பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்து இன்று விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது குறித்து இன்று சிறப்பு கலந்துரையாடல் ஒன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்துவார்கள்.

அதன்படி, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தடுப்பூசி போடப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கைகள் பரிசீலிக்கப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, அடுத்த மாதத்திற்குள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 17 இந்திய மீனவர்கள் கைது

editor

ஊரடங்கு எதற்காக?

சந்திரிக்காவை அத்தனகல்லை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்