சூடான செய்திகள் 1

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்

(UTV|COLOMBO)-நேற்று வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கான கையேடுகள் தற்போது அச்சிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் தினங்களில் இவற்றை மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்தக் கையேட்டை சரியான முறையில் விளங்கிக் கொண்டு தாம் விண்ணப்பிக்கக்கூடிய ஆகக்கூடிய கற்கை நெறிக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது முக்கியமானது என்று பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிதாக சில கற்கைநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2019ம் ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

ஆசிய உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் இன்று உரை

இருவேறு பகுதிகளில் இருந்து பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது

கொரோனா– 21 ஆயிரத்திற்கு மேல் பலி