(UTV|COLOMBO) – 2018 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் துணைத் தலைவர் கூறினார்.
பல்கலைக்கழக தொழில்சாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக ஒரு மாத காலம் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தன.
மருத்துவ மற்றும் பொறியியல் பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன நம்பிக்கை வெளியிட்டார்.
இரத்தினபுரி – குளியாப்பிட்டிய புதிய வைத்திய பீடங்கள் ஆரமபிக்கப்படுவதுடன், மருத்துவ கற்கை நெறியைத் தொடர்வதற்காக பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.