சூடான செய்திகள் 1

பலத்த சூறாவளி வீசக்கூடும்

(UTV|COLOMBO) தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான “பொனி” ஏப்ரல் 28ஆம் திகதி அதிகாலை 02.30மணிக்கு வட அகலாங்கு 6.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.9E இற்கும் அருகில் பொத்துவிலுக்குக் கிழக்காக ஏறத்தாழ 670 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது.

அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு பலத்த சூறாவளியாகவும் தொடர்ந்து 24 மணித்தியாலங்களில் ஒரு மிகப் பலத்த ஓரு சூறாவளியாகவும் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமணடலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இத் தொகுதி ஏப்ரல் 30ஆம் திகதி வரை வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்குக் கரையை விட்டு விலகி நகரக் கூடுவதுடன் அதன் பின் மீண்டும் படிப்படியாகத் திரும்பி வடகிழக்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், தென், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

 

Related posts

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று மற்றும் நாளை முன்னெடுப்பு

உயர் கல்வி நிறுவனங்களின் பட்டப் படிப்புக்களைத் தொடர 4 500 பேர் விண்ணப்பம்

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் அரிய வகை பழத் தோட்டம்