சூடான செய்திகள் 1

பலத்த காற்றுடன் மழை…

(UTV|COLOMBO)-இலங்கைக்கு தென்மேற்காக காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கையை விட்டு விலகிச் சென்று கொண்டுள்ளது. எனவே நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்

காணப்படும் மழையுடன் கூடிய நிலைமை நவம்பர் 10ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஓரளவு குளிரான வானிலை எதிர்பார்க்கப்படுகின்றது

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

 

 

Related posts

05 நாள் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

ரஞ்சன் குரல் பதிவு; அறிக்கை தருமாறு உத்தரவு

வில்பத்து பாதை வழக்கு – அடுத்த வருடம் மார்ச் மாதம் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடிவு